கயத்தாறு அருகே பெங்களுரில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த 750 கிலோ குட்கா பறிமுதல் : 2பேர் கைது!

கயத்தாறு அருகே பெங்களுரில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த 750 கிலோ குட்கா பறிமுதல் : 2பேர் கைது!

கயத்தாறு அருகே பெங்களுரில் இருந்து சரக்கு வாகனத்தில் 750 கிலோ குட்கா புகையிலையை கடத்தி வந்த 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே சுங்கச்சாவடியில் கயத்தாறு இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, பெங்களூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த டாடா இன்பிரா லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், சுமார் சுமார் 750 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. 

இதுதொடர்பாக அந்த வாகனத்தின் ஓட்டுநரான திருப்பூர் மாவட்டம் அவினாசிபாளையத்தைச் சேர்ந்த நாராயணசாமி மகன் ராஜேஷ் கண்ணன் (26), மற்றும் இருசக்கர வாகனத்தில் வழிகாட்டியாக வந்த தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையை சேர்ந்த பாண்டி மகன் ஜோஸ்வாராஜா (27) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புகையிலைப் பொருட்கள் மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.