தூத்துக்குடி: குற்றங்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை – ஜனவரியில் 99 பிடியாணை குற்றவாளிகள் கைது | எஸ்.பி. நை. சிலம்பரசன்

தூத்துக்குடி: குற்றங்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை – ஜனவரியில் 99 பிடியாணை குற்றவாளிகள் கைது | எஸ்.பி. நை. சிலம்பரசன்

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நை. சிலம்பரசன் அவர்களின் உத்தரவின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளிகள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, அனைத்து உட்கோட்ட போலீசாரும் தீவிர ரோந்து பணி மற்றும் வாகன தணிக்கை மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும், தொடர்ச்சியான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டும் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 99 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அதே காலகட்டத்தில், 17 குற்றவாளிகள் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், 20 பேரிடமிருந்து பிணைப்பத்திரமும் பெறப்பட்டது.

பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், தொடர்ச்சியான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நை. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.