கோவில்பட்டியில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மீசையை எடுத்து கவுன்சிலர் போராட்டம் !
கோவில்பட்டியில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மீசையை எடுத்து கவுன்சிலர் போராட்டம் !
கோவில்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நகராட்சி கவுன் சிலர் மீசையை எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 20வது வார்டு பகுதியில் தொடங்கப்பட்ட பல்வேறு பணிகளை நகராட்சி நிர்வாகம் விரைந்து முடிக்கமால் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், 20வது வார்டு முடுக்குதெருவில் அகற்றப்பட்ட குடிநீர் தொட்டியை மீண்டும் வைக்க நடவடிக்ககை எடுக்கவில்லை, கழிவு நீர் செல்ல அமைக்கப்பட்ட பாலத்தின் பணிகள் நிறைவு பெறமால் இருப்பதாகவும், ஏற்கனவே இப்பகுதியில் செயல்பட்டு வந்த நகர்நல மருத்துவமனை இடிக்கப்பட்டு நிலையில் அதற்கான புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை நகராட்சி நிர்வாகம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், 20வது வார்டுபகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை, பழுதான அடிபம்புகள் சீரமைக்கபடவில்லை, இவ்வாறு 20வது வார்டு பகுதியில் பல்வேறு பணிகளில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி நகராட்சி நிர்வாகத்தினை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 20வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் விஜயகுமார் நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்..
தனது கோரிக்கைகளை புறக்கணித்து வரும் நகராட்சி நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தனது மீசையை எடுத்து, நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் தனது வார்டில் நிறைவேற்றமால் இருக்கும் கோரிக்கைகள் மற்றும் கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகள் குறித்தும் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற உறுப்பினர் விஜயக்குமார் மனு அளித்தார்.
நகராட்சி நிர்வாகத்தினை கண்டித்து பா.ஜகவை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் மீசை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் சிறிது நேரம் பரபரப்பினை ஏற்படுத்தியது.