தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உப்புத் தொழிலாளர் சங்கம் கண்டனம்!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உப்புத் தொழிலாளர் சங்கம் கண்டனம்!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உப்புத் தொழிலாளர் சங்கம் கண்டனம்!

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ராஜபாண்டி நகர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில் ராஜ் அவர்கள் தலைமையில் ஜனவரி 31 ஆம் தேதி அன்று உப்பள தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்று உள்ளது.

இதில் உப்பள தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுள்ளார், மழைக்கால நிவாரணம் அனைவருக்கும் கிடத்திடவும், மருத்துவ முகாம் நடத்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.  

ஆனால் உப்பள தொழிலாளர்களுக்காக போராட்டங்கள் நடத்தக்கூடிய பல்வேறு அமைப்புகள் உள்ளன. இதில் பிரதானமாக உப்பள தொழிலாளர்களுக்காக பல்வேறு போராட்டங்களை உப்பு தொழிலாளர் சங்கம் (சிஐடியு) தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிலையில் இச்சங்கங்களுக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமல் ஒரே ஒரு குறிப்பிட்ட அமைப்பை சார்ந்தவரையும், தொழிலாளர்களையும் வைத்துக் கொண்டு மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடல் நடத்தியுள்ளார். இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த உப்பள தொழிலாளர்களுக்கு எவ்வித முறையான தகவலும் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஆகவே மாவட்ட ஆட்சியரின் இச்செயலுக்கு உப்பு தொழிலாளர் சங்கம் (சிஐடியு) கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது. வரக்கூடிய காலங்களில் உப்பள தொழிலாளர்களை மாவட்ட ஆட்சியர் சந்திக்க வேண்டும் எனில் அனைத்து தொழிற்சங்கங்களுக்கு முறையான தகவல் தெரிவித்து கருத்துகளை கேட்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். என உப்புத் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) மாவட்ட செயலாளர் கே.சங்கரன் தெரிவித்துள்ளார்.