தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவி உட்பட 3பேர் தற்கொலை!

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவி உட்பட 3பேர் தற்கொலை!

தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவி உட்பட 3பேர் தற்கொலை செய்து கொண்டனர். 

தூத்துக்குடி புதிய துறைமுகம் சுனாமி கானியைச் சேர்ந்தவர் சண்முகவேல் மகன் மாரி செல்வம் (19). மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று மது குடிப்பதற்கு தனது தாயாரிடம் பணம் கேட்டாராம். அவர் கொடுக்க மறுத்துவிட்டதால், மாரி செல்வம் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து தெர்மல் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அசோக் ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மற்றொரு சம்பவம்

தூத்துக்குடி தாளமுத்து நகர் ராஜகோபால் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் கருப்பசாமி (31). கூலி தொழிலாளி. இவர் தனது மனைவியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டாராம். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்ததால் மன வேதனை அடைந்த கருப்பசாமி நேற்று இரவு தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பள்ளி மாணவி 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் காட்வின் மகள் முத்துலட்சுமி (16). இவர் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.நேற்று அவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்

தி வருகிறார்.