சுதந்திர போராட்ட வீரர் பிறந்தநாளில் போர்க்களமாக மாறிய தூத்துக்குடி பழைய மாநகராட்சி... தூத்துக்குடியில் பரபரப்பு!

சுதந்திர போராட்ட வீரர் பிறந்தநாளில் போர்க்களமாக மாறிய தூத்துக்குடி பழைய மாநகராட்சி... தூத்துக்குடியில் பரபரப்பு!
சுதந்திர போராட்ட வீரர் பிறந்தநாளில் போர்க்களமாக மாறிய தூத்துக்குடி பழைய மாநகராட்சி... தூத்துக்குடியில் பரபரப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மக்கள் ஒற்றுமை பிரச்சார இயக்கம் வெள்ளி, சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சாதி மத வேறுபாடுகளை புறந்தள்ளுவோம்! மனித நேயத்தை நேசிப்போம்!! மக்கள் ஒற்றுமையை பலப்படுத்துவோம்! என்ற கோஷங்களை முன்வைத்து இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு), தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மக்கள் ஒற்றுமை பிரச்சார இயக்கம் வ உ சி பிறந்தநாளான செப்டம்பர் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை  அவர் பிறந்த ஓட்டப்பிடாரம் மண்ணில் இருந்து அவரது சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சார பயணம் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சியுடன் துவங்கியது. இந்த பிரச்சார இயக்கமானது ஓட்டப்பிடாரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம், முத்தையாபுரம் தோப்பு, ஆத்தூர், ஆறுமுகநேரி , காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதியில் நடைபெற்றது.

பாஜக கம்யூனிஸ்ட் மோதல்

தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் வளாகத்தில் வைக்கபட்டுள்ள வ.உ.சி சிலைக்கு பிரச்ச்சார குழுவினர் சார்பில் மாலை அணிவித்து பிரச்சார இயக்கம் நடைபெற்றது.  இந்நிலையில் சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.ரசல் பாரதியார் சுதேசி கொள்கையாளர் வ உ சிதம்பரனார் பற்றி பேச தொடங்கினர்.

 அவர் பேசுகையில்... இந்த மக்கள் ஒற்றுமை பிரச்சாரம் இயக்கம், பாரதியாரும் வ உ சிதம்பரனாரும்  மத வெறி சாதி வெறி எதிராக  களமாடிய இந்த மண்ணில், வ உ சிதம்பரனார் பிறந்த நாள் இன்று தொடங்கி பாரதியார் நினைவு நாள் செப் 11 தேதி வரை மாவட்ட முழுவதும் பிரச்சாரம் தொடங்கி இருக்கிறோம். மாவட்ட முழுவதும் மத வெறி சாதி வெறி தலை விரித்து ஆடுகிறது முடிவு கட்ட வேண்டும் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்

"இந்திய பொருளாதாரத்தை காப்ரேட் நிறுவனங்கள் இடம் அடகு வைக்கும் கொள்கைக்கு எதிராக யுத்த களமாக உள்ள நாடு மாறுவதற்கு மகாகவி பாரதியாரும் வ உ சிதம்பரனாரும் மிக பெரிய ஆதர்சனமாக விளங்குகிறார்கள்

இன்றைக்கு... அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவின் பொருளாதாரத்தை காவு கேட்டு கொண்டிருக்கிற இந்த நிலையில்....? இந்தியா வின் ஆளும் வர்க்கம் அவர்களுக்கு அடி பணிந்து கொண்டு இருக்கும் நிலையில்...."

என ரசல் பேசி கொண்டு இருக்கும் போதே பேசுவதை  சகித்துக் கொள்ள முடியாமல் பாஜகவை சேர்ந்த‌ கட்சி நிர்வாகி சொக்கலிங்கம் மைக்கை பிடிங்கியதால் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் தூத்துக்குடி பழைய மாநகராட்சி பகுதியில் போர்க்களம் போல் காட்சியளித்தது. பின்னர் கடைசி நிமிடத்தில் வந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

தூத்துக்குடி பழைய மாநகராட்சி பகுதியில் அமைக்கபட்டுள்ள வ.உ.சி சிலைக்கு இன்றைய தினம் பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெறக்கூடிய பகுதியில்  எந்த ஒரு காவலரும் பனியில் இல்லை. "போலீஸ் இல்லாததால் போர்க்களமாக மாறிய சுதந்திர போராட்ட வீரர் பிறந்தநாள் விழா".

இது தொடர்பாக சிபிஎம் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் விடுத்துள்ள அறிக்கையில்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிஐடியு, விதொச, தவிச உள்ளிட்ட சங்கத்தின் சார்பில் மதவெறி, ஜாதிவெறிக்கு எதிராக மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி செப்டம்பர் 5, 6 ஆகிய இரண்டு நாட்கள் பிரச்சார இயக்கம் நடத்த  காவ்ல்துறையிடம் உரிய அனுமதி பெற்று இன்றைய தினம் பிரச்சார இயக்கம் ஒட்டப்பிடாரம் வ.உ.சி இல்லத்தில் இருந்து துவங்கியது. தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு மக்கள் ஒற்றுமை குறித்து தோழர்கள் பேசிக்கொண்டிருந்தபோது பிரச்சாரத்தை சீர்குலைக்கும் விதமாக சனாதானம், இந்துத்துவம், ஜாதிவெறிக்கு எதிராக‌ பேசக்கூடாது எனக்கூறி பாஜக வை சேர்ந்த குண்டர்கள் தோழர்கள் மீது தாக்குதலை தொடுத்துள்ளனர். இத்தகைய கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட சொக்கலிங்கம், ராஜேஷ்கனி, சுந்தர், சிவராமன், உள்ளிட்ட பாஜக ரவுடி கும்பலை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.