ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! 45 நாள் பயிற்சி... மாதம் ₹25,000 வரை வேலைவாய்ப்பு!

ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! 45 நாள் பயிற்சி... மாதம் ₹25,000 வரை வேலைவாய்ப்பு!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து நடத்தும் இந்த சிறப்பு பயிற்சித் திட்டத்தின் கீழ் "Master Certification in Bridal Makeup Artistry" மற்றும் "Diploma in Creative Hair Dressing & Chemical Treatment" போன்ற தொழில்முறை பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

இந்தப் பயிற்சியில் சேர விரும்புபவர்கள் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். மேலும், 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

45 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சி திருச்சி மாவட்டத்தில் நடத்தப்பட உள்ளது. பயிற்சியில் பங்கேற்கும் தகுதியான நபர்களுக்கு தங்குமிடம் மற்றும் பயிற்சி தொடர்பான செலவுகள் அனைத்தும் தாட்கோ மூலம் ஏற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாகவே வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்யப்படும். ஆரம்ப கால மாத ஊதியமாக சுமார் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வருமானம் பெறும் வாய்ப்பு உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள், தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tahdco.com⁠�-ல் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவுறுத்தியுள்ளார்.