மது குடிப்பதை கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!
மது குடிப்பதை கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

குரும்பூர் அருகே குடிபோதையில் திருவிழாவுக்கு வந்ததை குடும்பத்தினர் கண்டித்தால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள மேல கடம்பா கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் லிங்கம் (29). இவர் சம்பவத்தன்று கோவில் விழாவிற்கு குடிபோதையில் வந்தாராம். இதனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.
இதில் மனமுடைந்த லிங்கம் தனது வீட்டு முன்பு உள்ள வேப்ப மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து குரும்பூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.