தூத்துக்குடி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: சிபிஎம் சார்பில் டிசம்பர் 17ல் போராட்டம்!

தூத்துக்குடி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: சிபிஎம் சார்பில் டிசம்பர் 17ல் போராட்டம்!

தூத்துக்குடியில் கட்டபட்டுள்ளா ம‌ல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம் செய்து வெளியிடபட்ட அரசானையை திரும்பப் பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டிசம்பர் 17ல் புதன்கிழமை போராட்டம் நடைபெறுகிறது. 

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், தூத்துக்குடி மாவட்ட செயலாள‌ர் கே.பி.ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமணை தூத்துக்குடி மையப்பகுதியில் அமைந்துள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு சிறப்புப் பிரிவுகளில் (பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, மகப்பேறு, குழந்தைகள் நலன், எலும்பியல், கண், காது, மூக்கு, தொண்டை, நரம்பியல், புற்றுநோய், சிறுநீரகம் போன்றவை) நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க படுக்கைகள் உள்ளன. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 1112 படுக்கைகள் உள்ளன, மேலும் மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்புக்காக தனிக் கட்டிடம் உள்ளது; மருத்துவமனையில் தினமும் சராசரியாக 2800 வெளி நோயாளிகளும், 600 உள் நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்நிலையில் ‘பிரதான் மந்திரி ஜன் விகாஸ் காரியக்ரம்’ திட்டத்தின் கீழ், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் (TKMச்ஹ்) மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மூன்றாவது மைலில் ஏழு தளங்களில் 687 படுக்கைகள் கொண்ட மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ₹136.35 கோடி செலவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில், ₹16 கோடி ஹைடெக் நோயறிதல் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை வாங்குவதற்கு செலவிடப்படும், அதே நேரத்தில் குடிமைப் பணிகள் ₹118.35 கோடி செலவில் முடிக்கப்படும். மொத்த தொகை ₹136.35 கோடியை மத்திய மற்றும் மாநில அரசுகள் 60:40 விகிதத்தில் பகிர்ந்து கொள்ளும் வகையில் கட்டிட பணிகள் நிறைவடைந்துள்ளது.  இந்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மூலம் இதவியியல், நரம்பியல், சிறுநீரகவியல், குடல் இரக்கம், புற்று நோய், தீக்காயம் மற்றும் ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சை உள்ளிட்ட உயர் ரக சிகிச்சை பிரிவு மருத்துவமனையாக செயல்பட இருந்தது.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது நோய்களுக்கான சிறப்பு சிகிச்சைக்காக நெல்லை, மதுரை, சென்னை  போன்ற மாவட்டங்களையே நம்பி இருக்கும் நிலை ஏற்படும். தூத்துக்குடி மாவட்டம் முக்கிய தொழில் நகரமாக செயல்படுவதால் தொழிலாளர்கள், விவசாயிகள் அதிகளவில் வசித்து வருகின்றனர். அவர்களது அன்றாட பணிகளுக்கு ந்டுவே மருத்துவமணைக்கு செல்லும் போது சில சிறப்பு சிகிச்சைகளுக்காக வெளி மாவட்டங்களுக்கு சென்று வருவதில் கடும் சிரமம் உள்ளது. மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தூத்துக்குடியில் கட்டப்படுவதன் மூலம் இப்பகுதி மக்கள் தங்களுக்கான சிகிச்சைகளை சொந்த மாவட்டத்திலே பெற்றுக் கொள்ளலாம் என்று இருந்தனர். 

இந்நிலையில் இந்த மருத்துவமனையை தற்போது மகப்பேறு மற்றும் குழந்தைகள் உயர் ரக சிகிச்சைக்காக சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல பிரிவு தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏழு தளங்களில் 687 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை  மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமணையாக மாற்றுவதால் ஏழு தளங்களையும் பயன்படுவதற்கு வாய்ப்பில்லை. பல்வேறு தளங்கள் செயல்படாமல் இருப்பதற்கான வாய்ப்புள்ளது.

மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக செயல்பட்டால் புற்றுநோய் இதயம், நரம்பியல், குடல் வால்வு,  உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான உயர் சிகிச்சை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.  அந்த வாய்ப்பை பயன் படுத்தாமல் ஒரு குறிப்பிட்ட இரண்டு சிகிச்சை பிரிவாக மாற்றுவது எந்த விதத்திலும் பொறுத்தமல்ல. ஆகவே இம்மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றுவதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் , அரசு தலைமை செய்லாளர், சுகாதாரத்துறை செயலர், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர், மாவட்ட அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி வைத்துள்ளோம். இந்த அரசானையை திரும்பப் பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் டிசம்பர் 17 ஆம் தேதி  புதன்கிழமை தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.