குலசை முத்தாரம்மன் கோவிலில் வேலை.. 40 ஆயிரம் வரை சம்பளம்..!! விண்ணப்பிக்க ரெடியா?
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தூத்துக்குடி குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் திருக்கோவிலில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்? எப்படி விண்ணப்பிப்பது? போன்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
மெடிக்கல் ஆஃபிசர் – 02 பணியிடங்கள்
ஸ்டாப் நர்ஸ் – 02
பல்நோக்கு சுகாதார பணியாளர் – 02 என மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
மெடிக்கல் ஆபிசர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எம்பிபிஎஸ் முடித்து இருக்க வேண்டும். TNMSE யில் பதிவு செய்து இருப்பது அவசியம்.
ஸ்டாப் நர்ஸ் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பொது நர்சிங் பிரிவில் டிப்ளமோ DGNM முடித்து இருக்க வேண்டும்.
மல்டி பர்போஸ் சுகாதார பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 8-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்.
வயது வரம்பு : மெடிக்கல் ஆஃபிசர், ஸ்டார் நர்ஸ் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 35 -வயது வரம்பு மிகாமல் இருக்க வேண்டும். பல்நோக்கு சுகதார பணியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை : தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படும். நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இது முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான பணி ஆகும். மெடிக்கல் ஆபிசர் பணிக்கு ரூ.60 ஆயிரமும், நர்ஸ் பணிக்கு ரூ.14 ஆயிரமும், சுகாதார பணியாளர் பணிக்கு ரூ.6 ஆயிரமும் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி? : விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
செயல் அலுவலர்,
அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில்,
குலசேகரன்பட்டினம்,
திருச்செந்தூர் வட்டம்
தூத்துக்குடி மாவட்டம் – 628206
என்ற முகவரிக்கு 05.10.2024 அன்று மாலை 5.45 மணிக்குள் கிடைத்திடும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை கோயில் அலுவலகத்தில் நேரிலோ அல்லது hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் முத்தாரம்மன் திருக்கோவில் எங்கிற பெயரில் உள்ள பக்கத்தில் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கேட்கப்பட்ட விவரங்கள்,சான்றுகள் ஆகிய இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.