நாசரேத்தில் மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளிக்கு பிடிவாரண்ட்!

நாசரேத்தில் மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளிக்கு பிடிவாரண்ட்!

நாசரேத்தில் மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் காவல் நிலைய குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட நாசரேத்தை சேர்ந்த சுந்தர் மகன் பிரபு, சின்னமதிக்கூடல் உடையார்குளத்தைச் சேர்ந்த பூங்கனி என்பவரை 2015ம் ஆண்டு தனியார் வங்கி ஏ.டி.எம்மில் வைத்து மோசடி செய்து ஏமாற்றி உள்ளார். இதுதொடர்பாக நாசரேத் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இதையடுத்து பிரபு தலைமுறைவாகிவிட்டார். இவர் மீது சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. அவரைப் பற்றிய எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. இதையடுத்து சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் பிரபுவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. மேற்கண்ட தகவலை நாசரேத் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் தெரிவித்துள்ளார்.