எப்போதும் வென்றான் அருகே மகனுக்காக கோரிக்கை வைத்த மூதாட்டி : ஒரு மணி நேரத்தில் மகனை நேரில் சென்று பார்த்த கனிமொழி எம்பி!
எப்போதும் வென்றான் அருகே மகனுக்காக கோரிக்கை வைத்த மூதாட்டி : ஒரு மணி நேரத்தில் மகனை நேரில் சென்று பார்த்த கனிமொழி எம்பி!
100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை பார்வையிட வந்த கனிமொழி கருணாநிதியிடம் பிரச்சனைகளைக் கூறிய மூதாட்டி. மருத்துவமனைக்கு சென்று மூதாட்டியின் மகனின் உடல்நலம் விசாரித்த கனிமொழி கருணாநிதி எம்.பி
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் ஈடுபட்டிருந்த வாய் பேச முடியாத மூதாட்டி லட்சுமி தனது மகனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் தான் வறுமையில் இருப்பதாகவும் கனிமொழி எம்பியிடம் கண்ணீர் மல்க செய்கை மூலம் தெரிவித்தார். அவருக்கு ஆறுதல் கூறி உதவி செய்த கனிமொழி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூதாட்டியின் மகன் கருப்பசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்றிந்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உடனிருந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் - எப்போதும் வென்றான் பகுதியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலையில் ஈடுபட்டு இருந்த பெண்களை, திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி சந்தித்தார். அங்கிருந்த பெண்களிடம் ஊதியம் முறையாகவும் குறித்த நேரத்திலும் கொடுக்கப்படுகிறாதா? பணியில் நிலைமைகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது வாய் பேச முடியாத லெட்சுமி என்ற மூதாட்டி கனிமொழி எம் பி யின் கையை பிடித்துக் கொண்டு தனது மகனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் தான் மிகுந்த வறுமையில் இருப்பதாகவும் கண்ணீர் மல்க செய்கை மூலம் தெரிவித்தார். அவருக்கு ஆறுதல் கூறி பணம் கொடுத்து உதவிய கனிமொழி தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் மூதாட்டியின் மகனை நேரில் சந்தித்து அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார் பின்னர் அவருக்கும் செலவிற்கு பணம் கொடுத்து உதவினார்.