பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை: தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!
பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவை இடையர்பாளையத்தைச் சேர்ந்த ஆனந்தன் மகன் மாதவன் (23) என்பவருக்கு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியுடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி கடந்த 12.11.2020 அன்று மாணவியை அவர் தனது உறவினர் வீட்டிற்கு அழைத்தச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து புகாரின் பேரில் மணியாச்சி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ ராமனுஜம், குற்றம்சாட்டப்பட்ட மாதவனுக்கு 27 அண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 2ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.