திருட்டு வழக்கில் கைதானவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. இளம்பகவத் உத்தரவின் பேரில் தென்பாகம் காவல் நிலைய திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி ரஹ்மத்துல்லாபுரம் பகுதி சேர்ந்த முகமது யூசுப் மகன் மொய்தீன் (36) என்பவரை தென்பாகம் காவல் நிலைய போலீசார் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.