திருச்செந்தூரில் 14 வகையிலான பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனைக்குத் தடை!

திருச்செந்தூரில் 14 வகையிலான பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனைக்குத் தடை!

திருச்செந்தூரில் 14 வகையிலான பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த, மற்றும் விற்பனை செய்ய நகராட்சி நிா்வாகம் தடை விதித்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் வகையில் நகராட்சிப் பகுதியில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக் கூடிய தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 14 வகையிலான பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ அல்லது சேமித்து வைத்துக் கொள்ளவோ பொதுமக்கள் மற்றும் வா்த்தக நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

எனவே, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக்கை ஒழித்து மாற்றுப் பொருள்களை பயன்படுத்தி *பிளாஸ்டிக் இல்லா நகரமாக* மாற்றுவதற்கு போதிய ஒத்துழைப்பு வழங்கிடுமாறு நகராட்சித் தலைவா் சிவஆனந்தி, துணைத் தலைவா் ஏ.பி.ரமேஷ், ஆணையா் கண்மணி ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனா்.