தூத்துக்குடியில் நெய்தல் கலைத் திருவிழா நிறைவு: எம்.பி, அமைச்சர், ஆட்சியர், பங்கேற்பு..!

தூத்துக்குடியில் நெய்தல் கலைத் திருவிழா நிறைவு: எம்.பி, அமைச்சர், ஆட்சியர்,  பங்கேற்பு..!

தூத்துக்குடியில் தமிழர்களின் பண்பாடு, கலை மற்றும் நாகரிகத்தைப் போற்றும் வகையில், நடைபெற்ற நான்காவது நெய்தல் கலைத் திருவிழா நிறைவுபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் ஸ்பிக் நிறுவனம் இணைந்து நடத்தும் நெய்தல் கலைவிழா தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மைதானத்தில் ஜூன் 13ல் கோலாகலமாகத் தொடங்கி நேற்று நிறைவு பெற்றது. கனிமொழி எம்.பி. ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் பாரம்பரியம்மிக்க மண்சார்ந்த கலைஞர்கள் தங்கள் குழுவினருடன் பங்கேற்று தங்களின் கலைத்திறனை வெளிப்படுத்தினர்.

முன்னதாக, தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகைகளைக் காட்சிப்படுத்தும் விதமாக உணவு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த உணவு அரங்குகளுக்கு கனிமொழி எம்.பி நேரில் சென்று, அரங்குகளின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடி, பல வகையான உணவுகளை உண்டு மகிழ்ந்தனர். மேலும், மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் கைவினைப் பொருட்களுக்கான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மகளிர் சுய உதவிக் குழுவினருடன் கனிமொழி எம்.பி கலந்துரையாடினார்.

நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், ஆட்சியர் இளம்பகவத், ஸ்ரீராணி குமாா் எம்.பி, எம்.எல்.ஏக்கள் சண்முகையா, அப்துல்வஹாப், ராஜா, நெல்லை மேயர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜு, மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன், கூடுதல் ஆட்சியர் இளம்பகவத், ஐஸ்வா்யா, கோட்டாட்சியா் பிரபு, முன்னாள் அமைச்சர் மைதீன்கான், முன்னாள் எம்.எல்.ஏ முத்துலட்சுமி, துணை மேயர் ஜெனிட்டா, மாநில மகளிர் ஆணைய தலைவி விஜயகுமாாி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.