தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்: அண்ணன் தற்கொலை செய்த மன வேதனையில் தம்பியும் தூக்கு

தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்: அண்ணன் தற்கொலை செய்த மன வேதனையில் தம்பியும் தூக்கு

தூத்துக்குடியில் அண்ணன் தற்கொலை செய்ததால் மன வேதனையில் தம்பியும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி, ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் சிவராஜ் (25). இவரது அண்ணன் நிர்மல்ராஜ் கடந்த மாதம் குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். அண்ணன் மீது அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருந்ததால் நிர்மல்ராஜ் இறந்த பின்பு சிவராஜ் மன வேதனையில் இருந்துள்ளார்.

இதனால் தானும் சாகப் போகிறேன் என்று பலமுறை கூறி வந்துள்ளார். குடும்பத்தினர் அவரை தேற்றி வந்த நிலையில், நேற்று இரவு தனது படுக்கை அறையில் சிவராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருளப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.