தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு: 4 கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவு!!

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு: 4 கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவு!!

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் ஆட்சியர் மற்றும் மேயர் திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில் 4 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத், மேயர் ஜெகன் பெரியசாமி  மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மற்றும் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.  

அப்போது பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேருந்து நிலையத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட  பகுதியை விட்டு பேருந்து நிலைய பயணிகள் செல்லும் வளாகப் பகுதியில் சுமார் 5 அடி நீளத்திற்கு வெளியே பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வியாபாரிகள் கடைகளை அமைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் பயணிகள் புகார் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் நான்கு கடைகளுக்கு உடனடியாக சீல் வைத்தனர். மாவட்ட ஆட்சியரின் இந்த அதிரடி நடவடிக்ககைக்கு பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.