தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 420 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு!
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 420 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு!
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக 2 யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில், தமிழக அரசின் மின் வாரியத்திற்கு சொந்தமான அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அனல் மின்நிலையம் மூலம் 5 யூனிட்டுகளில் மொத்தம் 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில், 3ஆவது யூனிட்டில் பராமரிப்பு பணி காரணமாக, நேற்று முன்தினம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 1ஆவது யூனிட்டில் உள்ள கொதிகலனில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால், சுமாா் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கொதிகலனில் ஏற்பட்டுள்ள பழுது இன்று சரிசெய்யப்பட்டு, இயக்கப்படும் என்றும், 3ஆவது யூனிட் பராமரிப்பு பணிக்காக 40 நாள்கள் நிறுத்தி வைக்கப்படும் என்றும் அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.