மத மோதல்களை உருவாக்கும் வகையில் செய்தி பதிவிட்ட செய்தியாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி : தூத்துக்குடி மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் இ.ம.க புகார்!
மத மோதல்களை உருவாக்கும் செய்திகளை பதிவிட்ட செய்தியாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி : தூத்துக்குடி மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
மத மோதல்களை உருவாக்கும் செய்திகளை பதிவிட்ட செய்தியாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி : தூத்துக்குடி மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் மத மோதல்களை உருவாக்கும் வகையில் செய்திகளை பதிவிட்ட செய்தியாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்படும் சைபர் கிரைம் பிரிவில் இந்து மக்கள் கட்சி சார்பில் மாநில பொதுச்செயலாளர் வசந்தகுமார் தலைமையில் அக்கட்சியினர் புகார் மனு அளித்தனர்.
பின்னர் இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் வசந்தகுமார் கூறுகையில், தூத்துக்குடியில் கடந்த ஏப்ரல் 6 பப்ளிக் ஆப் என்ற உள்ளூர் செயலில் சிவன் கோவில் வாசலில், அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் தகாத வார்த்தைகள் பேசுவது மற்றும் அருவருக்கத்தக்க வகையில் பெண்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு நடந்து கொண்ட குடிகார ஆசாமியை அப்பகுதியை சேர்ந்தவர் அங்கிருந்து விரட்டியுள்ளார். அதனை வீடியோ எடுத்த செய்தியாளர் அந்த நபர் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியதாகவும், கோவிலுக்கு பாம் வைக்க வந்தாயா? என்று பொய்யாகவும் செய்தியை பதிவிட்டுள்ளார். ஜாதி, மதம், பெண்களுக்கு எதிரான பாலியல் பிரச்சனைகளை பத்திரிகையாளர்கள் பெயர் சொல்லி பதிவிட கூடாது என்ற விதிமுறைகளை மீறி இஸ்லாமியர், தீவிரவாதி என்றும், பாம் வைக்க வந்தாயா? என்றும் செய்தியை பதிவிட்ட (ஷாலினி டிவி) நிருபர் இசக்கி ராஜா என்ற ராஜ் என்பவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். நம் மாவட்டத்தில் எந்த விதமான மதம் மோதல்களும் இல்லாத இந்த காலகட்டத்தில் இது போன்ற செய்தியாளர்களால் நம் மாவட்டத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க கூடும்.
எனவே சம்பந்தப்பட்ட செய்தியாளர் இசக்கி ராஜா என்ற ராஜ் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க இந்து மக்கள் கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என்றார்.