முத்தையாபுரத்தில் மணிப்பூர் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் கலவரத்தில் பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை கண்டித்து முத்தையாபுரம் பல்க் பஜார் பகுதியில் சிபிஎம் தூத்துக்குடி புறநகர் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முத்தையாபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு புறநகர் செயலாளர் பா.ராஜா தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் பூமயில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேச்சிமுத்து ஆகியோர் கண்டன உறையாற்றினார். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.அர்ச்சுணன் பேசினார், புறநகர குழு உறுப்பினர்கள் வெள்ளசாமி, முனியசாமி, வன்னியராஜா, சரஸ்வதி, சிவபெருமாள், கிளைசெயலாளர்கள் கிருஷ்ணபாண்டி, பாஸ்கர், செல்வி, முத்துபாண்டி, காசிராஜன், முருகன், எலியாஸ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.