பாசன விவசாயிகளை வஞ்சிக்கும் தாமிரபரணி நீர் வளத்துறை அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

பாசன விவசாயிகளை வஞ்சிக்கும் தாமிரபரணி நீர் வளத்துறை அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

பாசன விவசாயிகளை வஞ்சிக்கும் தாமிரபரணி நீர் வளத்துறை அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

பாசன விவசாயிகளை வஞ்சிக்கும் தாமிரபரணி நீர் வளத்துறை அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

பாசன விவசாயிகளை வஞ்சிக்கும் தாமிரபரணி நீர் வளத்துறை அதிகாரிகளை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வடகால், தென்கால் பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவைகுண்டம் தாமிரபரணி பாசனத்தில் வடகால் மற்றும் தென்கால் பாசனத்திற்கு தண்ணீரின்று கருகும் வாழைகளை காப்பாற்ற பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட கோரி பொதுப்பணித்துறை அதிகாரிகள், தூத்துக்குடி, நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆகியோருக்கு மனு அளிக்கப்பட்டும், தண்ணீர் திறந்து விடப்படாத நிலையில் ஏரல் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 26/07/23 அன்று காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. அதிலும் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் ஜூலை 31 அன்று முக்காணி ரவுண்டானாவில் சாலை மறியல் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் திருவைகுண்டம் அணையில் இருந்து வடகால் பாசனத்திற்கு 300 கன அடியும் மற்றும் தென்கால் பாசனத்திற்கு 250 கன அடியும் விவசாய பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என உறுதி அளிக்கப்படடதன் அடிப்படையில் மறியல் வாபஸ் பெறப்பட்டது.

       ஆனால் பேச்சு வார்த்தை முடிவுகளை அமுல்படுத்தாத நிலையில் இது குறித்து தாமிரபரணி வடிகால் பொதுப்பணித்துறை செயற்பொறியாளரை சந்தித்து பேசப்பட்ட போது விவசாயிகளின் நலன்களை புறக்கணித்து தொடர்ந்து தவறான தகவல்களை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

  இந்நிலையில் வடகால் மற்றும் தென்கால் விவசாயிகளுக்கு திருவைகுண்டம் அணையில் 4 அடி தண்ணீர் இருப்பதாகவும் அணையில் 7 அடி தண்ணீர் பெருகியவுடன் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை செயற்பொறியாளரிடம் வைக்கப்பட்டது. இந்நிலையில் பாபநாசம் அணையில் குடிநீருக்கு மட்டுமே தண்ணீர் திறந்திருப்ப‌தாகவும் விவசாயத்திற்கு தண்ணீர் அடைக்கப்பட்டதாகவும் தெரிவிவித்துள்ளார்.

தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து இயக்கம் நடத்தி வரும் வடகால் மற்றும் தென்கால் விவசாயிகளை புறக்கணித்து எந்த கோரிக்கையம்‌ வைக்காத‌ கீழக்கால் பகுதிக்கு SDO திரு ஆதிமூலம் தண்ணீர் திறந்து விட்டார். இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள குவாரி மூலம் தனியார் தண்ணீர் விற்பனை செய்யும் தனிநபருக்கு சாதகமாக SDO நடந்து கொள்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே தொடர்ந்து வடகால் தென்கால் விவசாயிகளை வஞ்சிக்கும் தாமிரபரணி வடிகால் செயற்பொறியாளர் திரு.மாரியப்பன் மற்றும் உதவி செயற்பொறியாளர் திரு ஆதிமூலம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏற்கனவே திருச்செந்தூர் கோட்டாட்சியர் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தை முடிவுகளை அமுலாக்க வேண்டும், கடைமடை வரை தண்ணீர் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வடகால் தென்கால் விவசாயிகள் சார்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் புவிராஜ் தலைமையில் கண்டண‌ ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் வடகால், தென்கால் பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சு.நம்பாராஜன் , விவசாயிகள் சங்க ஏரல் தாலுகா செயலாளர் க.சுப்புத்துரை, விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் தி.சீனிவாசன், லட்சுமிபுரம் ராஜாராம், உமரிக்காடு முருகன், ஒன்றிய கவுன்சிலர் பரத், சேர்வைக்காரன்மடம் பொன்ராஜ், முக்காணி சின்னத்தம்பி, தீப்பாச்சி லட்சுமணன், மாரமங்கலம் முத்துக்குமார், கூட்டாம்புளி பட்டுமுருகேசன் செல்வநாயகபுரம் சின்னத்துரை, உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.