தூத்துக்குடியில் மாவட்ட பஞ்சாயத்து, யூனியன் தலைவர்களுக்கு அரசு வாகனம் : அமைச்சர்கள் வழங்கினர்!

தூத்துக்குடியில் மாவட்ட பஞ்சாயத்து, யூனியன் தலைவர்களுக்கு அரசு வாகனம் : அமைச்சர்கள் வழங்கினர்!

தூத்துக்குடியில் மாவட்ட பஞ்சாயத்து, யூனியன் தலைவர்களுக்கு அரசு வாகனம் : அமைச்சர்கள் வழங்கினர்!

தூத்துக்குடியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் பஞ்சாயத்து யூனியன் தலைவர்களுக்கு அரசு வாகனங்களை அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் பயன்பாட்டுக்காக ரூ.25.40 கோடி மதிப்பிலான 200 புதிய வாகனங்கள் வழங்கும் பணியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். இதில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு 6 வாகனங்கள் ஒதுக்கப்பட்டன.

இந்த வாகனங்களை வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வாகனங்களை வழங்கினர்.

மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கு டாடா சபாரி வாகனமும், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், ஓட்டப்பிடாரம், புதூர் ஆகிய 5 பஞ்சாயத்து யூனியன் தலைவர்களுக்கு ஸ்கார்பியோ வாகனங்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அ.பிரம்மசக்தி மற்றும் பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் கலந்து கொண்டனர்.