மருந்து என நினைத்து பூச்சிமருந்தை குடித்த மூதாட்டி உயிரிழப்பு!!

மருந்து என நினைத்து பூச்சிமருந்தை குடித்த மூதாட்டி உயிரிழப்பு!!

ஆத்தூரில் மருந்து என நினைத்து தறுதலாக பூச்சிமருந்தை குடித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் யாதவர் தெருவைச் சேர்ந்த ராமசாமி மனைவி சுப்பம்மாள் (75). இவருக்கு 3 மகன்கள், 3 மகள்களுக்கும் திருமணமான நிலையில், இவர் தனது கடைசி மகன் உத்தமன் பராமரிப்பில் இருந்துவந்தார். உடல்நலக் குறைவால் சில மாதங்களாக மருந்து, மாத்திரைகள் உள்கொண்டு வந்தார்.

இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி இரவு மருந்து பாட்டில் என நினைத்து அருகே இருந்த பூச்சிமருந்தை எடுத்துக் குடித்ததாகக் கூறப்படுகிறது. அடுத்த நாள் காலை மயங்கிக்கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 19ஆம் தேதி சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து உதவி ஆய்வாளர் பாஸ்கரன் வழக்குப் பதிவு செய்துள்ளார். ஆய்வாளர் மாரியப்பன் விசாரணை நடத்தி வருகிறார்.