தூத்துக்குடியில் பைக் விபத்தில் மின்வாரிய ஊழியர் பலி!

தூத்துக்குடியில் பைக் விபத்தில் மின்வாரிய ஊழியர் பலி!

தூத்துக்குடியில் லாரி மீது பைக் மோதிய விபத்தில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் கணேசன் (21). இவர் மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று திருநெல்வேலி சென்றுவிட்டு அதிகாலை 2 மணியளவில் பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். 

பொட்டலூரணி விலக்கு, வாகைகுளம் அருகே வந்தபோது முன்னால் சென்று காெண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக இவரது பைக் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.