ஜூன் 23ல் முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்!!
ஜூன் 23ல் முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்!!
தூத்துக்குடியில் வருகிற ஜூன் 23ஆம் தேதி முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் சுயவேலைவாய்ப்பு கருத்தரங்கு நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தோருக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் சுயவேலைவாய்ப்பு கருத்தரங்கு 23.06.2023 அன்று மாலை 03.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள முத்து அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த சுயதொழில் புரிய ஆர்வமுள்ள முன்னாள் படைவீரர்கள் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
மேலும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க விரும்பும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு தங்கள் மனுக்களை இரட்டை பிரதிகளில் அடையாள அட்டை நகலுடன் சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு "தூத்துக்குடி, முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநரை நேரில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.