திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழா: நாளை முதல் அரசு விரைவு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழா: நாளை முதல் அரசு விரைவு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி நாளை 4ம் தேதி முதல் அரசு விரைவு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில் "ஜூலை 7ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில்குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் ஜூலை 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

ஜூலை 7ம் தேதி திருச்செந்தூரிலிருந்து சென்னை, திருச்சி, புதுச்சேரி. கும்பகோணம், சேலம், பெங்களூரு, தஞ்சாவூர், கோயம்புத்தூர், ஈரோடு, நாகப்ட்டினம் ஆகிய இடங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், பக்தர்கள் கடைசி நேரத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.