திரிபுரா பாஜகவினரை கண்டித்து தூத்துக்குடியில் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்!!
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், கடந்த பிப்ரவரி 16ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஆட்சியை அமைக்க 31 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக 33 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. ஆனால் கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் 11 இடங்கள் குறைவாகவே பாஜக வெற்றி பெற்றுள்ளது.