தூத்துக்குடியில் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்!

இந்தியன் கனரக வாகன ஓட்டுநர்கள் நல கூட்டமைப்பு, வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழகம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து கனரக வாகன ஓட்டுநர்களுக்காக இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச கண் கண்ணாடி வழங்கும் முகாம் தூத்துக்குடி துறைமுகம் ஆணையம், பாஸ் வழங்கும் இடம் லாரி நிறுத்த முனையத்தில் வைத்து நடைபெற்றது.

இதில், இந்தியன் கனரக வாகன ஓட்டுனர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனர் டாக்டர் முத்துக்குமார், தேசிய நிகழ்ச்சி பொறுப்பாளர் AL சரவணன், மாநில தலைவர் வரதராஜ், மாவட்ட தலைவர் ஜான்சன், மாவட்ட துணைத் தலைவர் கண்ணன், வ.உ.சி துறைமுக பொறுப்பு கழக சார்பில் முதுநிலை துணை மேலாளர் ரமேஷ், துணை போக்குவரத்து மேலாளர் சுரேஷ், தலைமை மருத்துவ அதிகாரி ராஜேஷ், அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் மருத்துவர் மகேஸ்வரி தலைமையிலான குழுவுடன் இணைந்து சுமார் 300க்கும் மேற்பட்ட கனரக வாகன ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை நடத்தி இலவச கண் கண்ணாடி வழங்கி முகாம் சிறப்பாக நடத்தினார்.

இதில், சிறப்பு சேர்க்கும் வித‌மாக கனரக வாகன பெண் ஓட்டுநர்கள் ஜெயலட்சுமி மற்றும் சகாயமேரி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினர்.

இது தொடர்பாக‌ நிறுவனர் டாக்டர் முத்துக்குமார் கூறுகையில், கனரக வாகன ஓட்டுநனர்களுக்கு சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்து 10 ஆண்டுகளாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். 2,,500க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை செய்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக இன்று  நடைபெற்ற கண் சிகிச்சை முகாமில், 300க்கும்  மேற்பட்ட ஓட்டுநர்கள் பயனடைந்ததாக கூறினார்.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கணரக வாகன ஓட்டுநர் மணி கூறுகையில்,  தர்மபுரி மாவட்டத்தில் இருந்து சரக்கு லோடு ஏற்றி வந்தோம். இந்நிலையில், தூத்துக்குடி கனரக வாகனம் நிறுத்தம் இடத்தில் ஓட்டுநர்களுக்கு இலவச சிகிச்சை முகாம் போடப்பட்டு  இருந்ததை கண்டு சிகிச்சை பெற்றோம். இதுவே, மருத்துவமனையில், சென்று பார்க்கும் பட்சத்தில் 100 ருபாய் முதல்  500 ரூபாய் அளிக்க வேண்டி இருக்கும். ஆனால் கனரக ஓட்டுநர் நல கூட்டமைப்பு சார்பில் இலவசமாக கண் சிகிச்சை பெற்றோம். இந்த முகாமினை ஏற்படுத்தி தந்த இந்தியன் கனரக ஓட்டுநர் நல கூட்டமைப்பு, வஉசி துறைமுகம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என கூறினார்.