திருமணம் முடிந்து இரண்டு மாதத்தில் கணவனை கடத்திச் சென்ற குடும்பத்தினர் : ஆட்சியர் அலுவலகத்தில் காதல் மனைவி கண்ணீர் பேட்டி.

திருமணம் முடிந்து இரண்டு மாதத்தில் கணவனை கடத்திச் சென்ற குடும்பத்தினர் : ஆட்சியர் அலுவலகத்தில் காதல் மனைவி கண்ணீர் பேட்டி.

தூத்துக்குடி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண்ணின் கணவரை அவரது குடும்பத்தினர் தாக்கி கடத்திச் சென்று தனியார் அமைப்பில் அடைத்து வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சாருமதி (27) என்பவர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நீதிபதியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

“நான் இந்து தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். எனது கணவர் மருதநாயகம் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர். கடந்த சில ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தோம். இதையடுத்து கடந்த மார்ச் 24ஆம் தேதி மலையக கோவிலில் திருமணம் செய்து கொண்டோம்.

திருமணத்திற்கு பின்னர், எங்கள் உறவை எதிர்த்த கணவரின் குடும்பத்தினர் அவரை தாக்கி, சட்டவிரோதமாக அழைத்துச் சென்று தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் அறக்கட்டளையில் தங்க வைத்துள்ளனர். எனக்கு கணவரை சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை.

இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுத்து, எனது கணவரை மீட்டு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.