திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை மீறி தகுதி பார்த்து மகளிர் உரிமைத் தொகை வழங்குவதை கண்டித்து பிள்ளையாரிடம் மனு!

திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை மீறி தகுதி பார்த்து மகளிர் உரிமைத் தொகை வழங்குவதை கண்டித்து பிள்ளையாரிடம் மனு!

திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை மீறி தகுதி பார்த்து மகளிர் உரிமைத் தொகை வழங்குவதை கண்டித்து பிள்ளையாரிடம் மனு!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ்கட்சி சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பிள்ளையாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

தமிழகத்தில் நடந்த கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், வீடுகளில் உழைக்கும் மகளிரை கௌரவிக்கும் பொருட்டு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை அடமான வைத்தவர்களின் நகைக்கடன் தள்ளுபடி என தெரிவிக்கப்பட்டது. தேர்தலின்போது திமுக தலைவரும் தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின், அவரது சகோதரியும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, முதல்வரின் மகனும், தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மகளிர் உரிமைத்தொகை குறித்து தெரிவித்து மக்களிடம் வாக்குகளை பெற்றனர். குறிப்பாக பெண்களின் வாக்குகளை கவர, இந்த மகளிர் உரிமைத்தொகை மிகவும் உதவியாக இருந்தது.

எப்போதுமே தேர்தலின்போது ஒரு பேச்சும், பதவிக்கு வந்தவுடன் ஒரு பேச்சும் போசுவது திமுகவின் வாடிக்கை. அதனை தற்போது செயல்படுத்துகின்றனர். நகைக்கடன் தள்ளுபடியில் ஏராளமான விதிகளை புகுத்தி, முழுமையாக யாரும் பயனடையவிடாதபடி செய்துவிட்டனர். அதையே தற்போது மகளிர் உரிமைத்தொகையில் பின்பற்றுகின்றனர். 

அதாவது பல்வேறு விதிமுறைகளை கொண்டு அதை செயல்படுத்த உள்ளனர். அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் மகளிர் உரிமைத் தொகை என்று தான் அறிவித்தனர். ஆனால், செயல்படுத்த இருப்பதோ தகுதி உரிமைத் தொகையாக உள்ளது. பல்வேறு தகுதி பார்த்து மகளிர் உரிமைத் தொகை வழங்க உள்ளனர். இது மக்களிடையே பிரிவினைத் தான் உருவாக்கும். அவர்களுக்கு இது எந்தவிதத்திலும் உதவிகரமாக இருக்காது. எனவே, அனைத்து மகளிருக்கு எந்தவித பேதமையும் பார்க்காமல் உரிமைத் தொகையை வழங்கி கௌரவிக்க வேண்டும்.

மேலும், ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னரே மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துகின்றனர். உரிமைத் தொகை என்று பெயர் வைத்துவிட்டு, அதனை ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து உரிமைத் தொகையை தராமல் இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் வழங்குவது மகளிரை ஏமாற்றுவதாக கருதுகிறோம். இந்த இரண்டரை ஆண்டுகளுக்கு வழங்க வேண்டிய தொகையை அரசு ஊழியர்களுக்கு அரியர் பணம் வழங்குவது போல் மகளிருக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  

இந்நிகழ்வில் கோவில்பட்டி தமிழ் மாநில காங்கிரஸ் நகரதலைவர் ராஜகோபால், வட்டாரத்தலைவர்  ஆழ்வார் சாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் கனி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமுருகன், நகரப் பொருளாளர் செண்பகராஜ், நகரச் செயலாளர் வின்சென்ட், மணிமாறன்,நகரத் துணைச் செயலாளர் மாரிமுத்து, ஜான். உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்து கோரிக்கை மனு அளித்தனர்.