குடி போதை மறுவாழ்வு மையம் சார்பாக உலக போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!!

குடி போதை மறுவாழ்வு மையம் சார்பாக உலக போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!!

குடி போதை மறுவாழ்வு மையம் சார்பாக உலக போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!!

தூத்துக்குடி சில்ரன்ஸ் பாரடைஸ் டிரஸ்ட், லைட் ஹவுஸ் குடி போதை நோயாளிகள் மறுவாழ்வு மையம் சார்பாக உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி சில்ரன்ஸ் பாரடைஸ் டிரஸ்ட், லைட் ஹவுஸ் குடி போதை நோயாளிகள் மறுவாழ்வு மையம் சார்பாக உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மேனேஜிங் டிரஸ்டி ஜவகரஓடிசியஸ் தலைமை தாங்கினார் ட்ரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் முகமது ஷாநவாஸ் அஜித் மற்றும் திட்ட இயக்குனர் ஆல்பர்ட் முன்னிலை வகித்தனர். மனநல ஆலோசகர் ஜெனிஷா விழா வரவேற்புரை ஆற்றினார். 

விழாவில் தூத்துக்குடி மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு போதை விழிப்புணர்வு சிறப்புரையாற்றி லைட் ஹவுஸ் குடிபோதை நோயாளிகள் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று போதை பழக்கத்தில் இருந்து விடுபட்ட இருபதுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு விருதுகளை வழங்கி ஆலோசனைகள் கூறினார். சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர்கள் சாகுல் ஹமீது, ஸ்டாலின், தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ஷாஜகான், தூத்துக்குடி தொன்மாக்கள் காவல் நிலையம் ஆய்வாளர் ராமலட்சுமி , காவல்துறையினர், ஊடக நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழியினை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். நிறைவில் மனநல ஆலோசகர் தனிஷா நன்றியுரை ஆற்றினார்.