தூத்துக்குடியில் மீன், கோழி இறைச்சி விலை அதிகரிப்பு!
தூத்துக்குடியில் மீன், கோழி இறைச்சி விலை அதிகரிப்பு!
தூத்துக்குடி மாவட்டத்தில் கோழி இறைச்சி விலை கடுமையாக அதிகரித்து உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்ரல் 15-ந் முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கொண்டு கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த தடைக்காலம் நாளை மறுநாளுடன் (புதன்கிழமை) முடிவுக்கு வருகிறது. மீன்பிடி தடைக்காலத்தில் நாட்டுப்படடகுள் மட்டும் கடலுக்கு சென்று வருகின்றன. இதனால் மீன்கள் வரத்து குறைவாக இருப்பதால் விலை அதிகரித்து காணப்படுகிறது.
இதே போன்று கறிக்கோழிகள் விலையும் அதிகரித்து உள்ளது. கடும் வெயில் காரணமாக கறிக்கோழிகள் எளிதில் இறந்து விடுவதாகவும், இதனால் கோழிகள் வரத்து குறைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த சில வாரங்களாக கறிக்கோழியின் விலை ஒரு கிலோ ரூ.240 வரை விற்பனை செய்யப்பட்டன. இதனால் இறைச்சி பிரியர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.