அரசு மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக புற்றுநோய்  தின விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடைபெற்றது.

புற்றுநோய் சிகிச்சை பிரிவு  மருத்துவர்  இன்சுவை வரவேற்றார். மருத்துவர் ஆக்னஸ் லலிதா புற்றுநோய் குறித்து விளக்கினார். மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவர்  சிவகுமார் தலைமை வகித்தார்  உறவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி முன்னிலை வகித்தார்.

அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள்  மற்றும் அவர்களது உறவினர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து அவர்களுக்கு யோகா பயிற்சி கொடுக்கப்பட்டது  புற்று நோய்  சிகிச்சை பிரிவு தலைவர் மருத்துவர்  லலிதா சுப்பிரமணியன் நன்றி கூறினார்.