தூத்துக்குடி லூர்து அன்னை ஆலயத்தில் இயேசு உயிர்த்தெழும் விழா – உலக அமைதிக்காக மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தித்த மக்கள்

தூத்துக்குடி லூர்து அன்னை ஆலயத்தில் இயேசு உயிர்த்தெழும் விழா – உலக அமைதிக்காக மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தித்த மக்கள்

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறிக்கும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தில் அமைந்துள்ள லூர்து அன்னை ஆலயத்தில் இயேசுபிரான் உயிர்த்தெழும் நிகழ்வு தத்துரூபமாக நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பங்குத்தந்தை செல்வன் பர்ணாந்து தலைமையில், அருட்தந்தைகள் அமலன் தமியான் மற்றும் ஜேசுராஜ் முன்னிலையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஏராளமான கிறிஸ்தவ மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி உலக அமைதி வேண்டியும், குறிப்பாக இஸ்ரேல் – ஈரான் போர் நிறைவடைய வேண்டியும் மனமார்ந்த பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

மேலும் தூய பனிமய மாதா பேராலயம், திரு இருதய பேராலயம், அந்தோணியார் ஆலயம், இன்னாசியார் ஆலயம் உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து தேவாலயங்களிலும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு திருப்பலிகள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான இறைமக்கள் கலந்து கொண்டு ஆன்மிக உற்சாகத்துடன் கொண்டாடினர்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை செல்வன் பர்ணாந்து தலைமையில் லூர்து அன்னை இளைஞர் இயக்கம், பங்கு மேய்ப்புப் பேரவை உறுப்பினர்கள், அன்பியங்கள் மற்றும் அருள் சகோதரிகள் செய்திருந்தனர்.