மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 418 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அதே போல் மாற்றுத்திரனாளிகளிடம் உதவித்தொகை, இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 18 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்கள்.
அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்ட 5 நபர்களுக்கு தீருதவித்தொகை இரண்டாம் தவணை தலா ரூ.6,00,000/- பெறுவதற்கான ஆணைகளையும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரங்களையும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் தாட்கோ மூலம் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000/- ஈமச்சடங்கு மற்றும் இயற்கை மரணம் உதவித்தொகைக்கான காசோலைகளையும், 07 தூய்மைப் பணியாளர்களுக்கு தூய்மைப் பணியாளர் நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டைகளையும், முன்னாள் படைவீரர் நலன் சார்பில் ஒரு நபருக்கு திருமண மானிய நிதியுதவி ரூ.25,000/-க்கான காசோலையையும், ஒரு நபருக்கு புற்றுநோய் நிவாரண நிதியுதவி ரூ.14,000/-க்கான காசோலையையும், ஒரு நபருக்கு கல்வி உதவித்தொகை ரூ.10,000/- க்கான காசோலையையும், படைவீரர் கொடி நாள் 2018, 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் மிகை வசூல் புரிந்த பல்வேறு துறைகளை சார்ந்த 08 அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய்சீனிவாசன், துணை ஆட்சியர் (பயிற்சி) பிரபு உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.