அரிவாளுடன் இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட்டவர் கைது: வாள் - கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்!

அரிவாளுடன் இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட்டவர் கைது: வாள் - கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்!

ஆத்தூர் பகுதியில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கையில் அரிவாளுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த நாராயணன் மகன் நவீன் ஹரிஷ் (23) என்பவர் கையில் அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து ஆத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து நவீன்ஹரிஸ் என்பவரை நேற்று கைது செய்து அவரிடமிருந்த ஒரு வாள் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்று பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ, ஜாதி, மத மோதலை தூண்டும் வகையிலோ, கையில் ஆயுதங்களுடன் அச்சுறுத்தும் வகையிலோ அல்லது சட்டத்திற்கு புறம்பான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் யாராக இருந்தாலும் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ அல்லது ஆயுதங்களை வைத்துக்கொண்டோ பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டது தொடர்பாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17 எதிரிகள் மீது நடவடிக்கை மேற்கொண்டும், அதே போன்று பொது இடங்களில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்து ரவுடித்தனம் செய்தல் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஆயுதச் சட்டத்தின் படி 107 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 197 எதிரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பி

டத்தக்கது.