தில்லிக்குப் புறப்பட்டார் நயினார் நாகேந்திரன்! அமித் ஷாவுடன் சந்திப்பு?

தில்லிக்குப் புறப்பட்டார் நயினார் நாகேந்திரன்! அமித் ஷாவுடன் சந்திப்பு?

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்கு அவர் அமைச்சர்கள் அமித் ஷா, ஜே.பி.நட்டா மற்றும் பிற முக்கிய பாஜக தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்ணாமலைக்குப் பின் தமிழ்நாட்டில் பாஜகவின் அடுத்த மாநில தலைவருக்கான போட்டியில் நயினார் நாகேந்திரன் பெயரே முன்னிலை வகிக்கிறது. அவருக்கு அடுத்தபடியாக, இந்த போட்டியில் வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன் பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

வெகுவிரைவில், தமிழ்நாட்டில் பாஜகவின் அடுத்த மாநில தலைவர் யார்? என்பது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.