முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நூலகத்தில் 70 மாணவர்கள் உறுப்பினராக சேர்ப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மைய நூலகத்தில் 70 மாணவ, மாணவிகள் உறுப்பினராக சேர்க்கப்பட்டனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மைய நூலகத்தில் 70 மாணவ, மாணவிகள் உறுப்பினராக சேர்க்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 70 மாணவ, மாணவிகளை உறுப்பினராக சேர்க்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு முதல்நிலை நூலகர் மா.ராம்சங்கர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு, நூலக நண்பர்கள் திட்டத்தின் கீழ் சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் நூலக சேவையை வழங்கும் நோக்கில் 27 நூலக தன்னார்வலர்களுக்கு புத்தகப்பையும், அடையாள அட்டையும், 70 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நூலக உறுப்பினருக்கான தொகையையும் வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், நூலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மைய நூலக இரண்டாம் நிலை நூலகர் கொ.சங்கரன் நன்றி கூறினார்.