மினி பஸ்சில் சென்ற தூத்துக்குடி பெண்ணிடம் ரூ.1 லட்சம் திருட்டு போலீஸ் விசாரணை..!

மினி பஸ்சில் சென்ற தூத்துக்குடி பெண்ணிடம் ரூ.1 லட்சம் திருட்டு போலீஸ் விசாரணை..!

அருப்புக்கோட்டையில் மினி பஸ்சில் சென்றபோது தூத்துக்குடி பெண்ணிடம் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியாபுரத்தை சேர்ந்தவர் சண்முகராஜ் மனைவி முத்துகுரு (48). இவர் அருப்புக்கோட்டை கணேஷ் நகரில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு செல்வதற்காக அருப்புக்கோட்டைக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து மினி பஸ்சில் சென்று கொண்டு இருந்தார். பஸ்சில் இருந்து இறங்கி பையை பார்த்தபோது, அதில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து முத்துகுரு, அருப்புக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பெண்ணிடம் பணத்தை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.