ஆா்டிஐயில் 2ஆவது மேல் முறையீடு: 50 மனுக்கள் மீது விசாரணை!!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா்அலுவலக கூட்டரங்கில் தகவல் அறியும் உரிமை சட்ட (ஆா்டிஐ) 2ஆவது மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது.
தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுத் தகவல் அலுவலா் 30 நாள்களுக்குள் பதில் தரவில்லையெனில் அதே துறையின் மேல்முறையீட்டு அலுவலருக்கு முதல் மேல்முறையீடு செய்ய வேண்டும். முதல் மேல் முறையீடு அனுப்பிய 30 நாள்களுக்குள் தகவல் கொடுக்கவில்லை என்றாலும், கொடுத்த தகவலில் திருப்தி இல்லை என்று நினைத்தாலும் தகவல் ஆணையத்திடம் 2ஆவது மேல்முறையீடு செய்யலாம்; மாநில தகவல் ஆணையா் நேரடியாக விசாரணை நடத்துவாா்.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 2ஆவது மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை தூத்துக்குடி ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநில தகவல் ஆணையா் கே.திருமலைமுத்து பங்கேற்று மனுதாரா்கள், சம்பந்தப்பட்ட தகவல் அலுவலா்களிடம் விசாரணை மேற்கொண்டாா். இதில், மொத்தம் 50 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக மாவட்ட நிா்வாக வட்டாரங்கள் தெரிவித்தன.
-----------------------------------------------------------
உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தெரிந்துகொள்ள...
WHATSAPP GROUP LINK 1 :- CLICK HERE
WHATSAPP GROUP LINK 2 :- CLICK HERE