விளாத்திகுளம் அருகே கண்மாயில் கிடந்த மனித எலும்புகள் குறித்து போலீசார் விசாரணை!!

விளாத்திகுளம் அருகே உள்ள எல்.வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் கண்மாயில் தற்போது தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில், கண்மாயில் மனித எலும்புக்கூடுகள்

விளாத்திகுளம் அருகே கண்மாயில் கிடந்த மனித எலும்புகள் குறித்து போலீசார் விசாரணை!!

விளாத்திகுளம் அருகே உள்ள எல்.வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் கண்மாயில் தற்போது தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில், கண்மாயில் மனித எலும்புக்கூடுகள் கிடந்தன. இதனை பார்த்த மக்கள் உடனடியாக காடல்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு இதில், சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்தவரின் எலும்புக்கூடுகளாக இருக்கலாம் என தெரிவித்தனர். 

மேலும் விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பு யாராவது காணாமல் போனார்களா? அல்லது வேறு ஏதேனும் அசம்பாவிதம் நடந்துள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும், எலும்புகளை கைப்பற்றி ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். அதன் முடிவுகள் வந்த பின்னரே கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகளின் பாலினம், வயது, எத்தனை மாதங்களுக்கு முன்பு இறப்பு நிகழ்ந்திருக்கலாம் போன்ற விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.