தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் சிக்னலில் ஒரே நேரத்தில் எரியும் சிவப்பு மற்றும் பச்சை விளக்குகள் : குழப்பத்தில் வாகன ஓட்டிகள்..!

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட காய்கறி மார்க்கெட் பகுதியில் உள்ள சிக்னலில் ஒரு நேரத்தில் சிவப்பு மற்றும் பச்சை வண்ண விளக்குகள் எரிந்ததை தொடர்ந்து வாகன ஓட்டிகள் கடும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சி அருகே உள்ள மார்க்கெட் சிக்னலில் உள்ள விளக்குகளில் ஒன்றில் வாகனத்தை இயக்குவதை குறிக்கும் பச்சை விளக்கும், இன்னொரு போஸ்டில் வாகனத்தை நிறுத்துவதை குறிக்கும் சிகப்பு விளக்கும் ஒரே நேரத்தில் எரிவதால் வாகன ஓட்டிகள் சிக்னலில் நிற்பதா அல்லது வாகனத்தை இயக்குவதாக என்ற குழப்பத்தில் உள்ளனர்.
தொடர்ந்து பச்சை விளக்கு எரிவதால் சில சமயங்களில் வாகன ஓட்டிகள் வேகமாக வந்து திரும்பும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக மேற்படி சிக்னலை சரி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சிபி எம் மாநகர் செயலாளர் எம் எஸ் முத்து, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.