கொலை மிரட்டல் குறித்து நடவடிக்கை எடுக்காத காவல்துறை: ஓய்வுபெற்ற ராணுவ பரபரப்பு புகார்!!

கொலை மிரட்டல் குறித்து நடவடிக்கை எடுக்காத காவல்துறை: ஓய்வுபெற்ற ராணுவ பரபரப்பு புகார்!!

கொலை மிரட்டல் புகார் குறித்து நடவடிக்கை எடுக்கவில்ல என்று ஆழ்வார்திருநகரி காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் மீது ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி அருகே உள்ள தங்கையாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சுந்தர்ராஜ் இவருக்கும் இவரது வீட்டு அருகே வசித்து வரும் அதே பகுதியைச் சேர்ந்த பாக்கியநாதன் என்பவருக்கும் இட பிரச்சனை இருந்துள்ளது.  இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தனது இடத்தில் காம்பவுண்டு சுவர் எழுப்பி கதவு அமைத்துள்ளார்.  

இதைத்தொடர்ந்து அருகே உள்ள வீட்டில் வசிக்கும் பாக்கியநாதன் மற்றும் அவரது மனைவி ஞானபாய் ஆகியோர் அந்த காம்பவுண்ட் சுவரை ஆட்களை வைத்து இடித்ததுடன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சுந்தர்ராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.  இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சுந்தர்ராஜ் ஆழ்வார் திருநகரி காவல் உதவி ஆய்வாளர் செல்வத்திடம் பாக்கியநாதன் மற்றும் அவரது மனைவி ஞானபாய் மீது கட்டிடத்தை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக புகார் அளித்துள்ளார். 

ஆனால் உதவி ஆய்வாளர் செல்வம் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காமல் பாக்கியநாதன் மற்றும் ஞானபாய்க்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.  இதைத்தொடர்ந்து ஆழ்வார் திருநகரி காவல் ஆய்வாளர் ஸ்டெல்லா விடம் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சுந்தர்ராஜ் மீண்டும் புகார் அளித்துள்ளார்.  இதற்கு காவல் ஆய்வாளர் உரிய நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்யாமல் இழுத்து அடித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சுந்தர்ராஜ் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்து ஆழ்வார்திருநகரி ஆய்வாளர் ஸ்டெல்லா உதவியாளர் செல்வம் மற்றும் பாக்கியநாதன் அவரது மனைவி ஞானபாய் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனு அளித்தார். மேலும், தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருப்பதாகவும் நடவடிக்கை இல்லையென்றால் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.