தூத்துக்குடி அருகே 12 வயது பள்ளி மாணவன் தற்கொலை - போலீஸ் விசாரணை!

தூத்துக்குடி அருகே 12 வயது பள்ளி மாணவன் தற்கொலை - போலீஸ் விசாரணை!

தூத்துக்குடி அருகே 12 வயது பள்ளி மாணவன் தற்கொலை செய்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி அருகே உள்ள புதியம்புத்தூர், சாமிநத்தம், கீழத் தெருவைச் சேர்ந்தவர் மரிய ஜேக்கப். இவரது மகன் முகேஷ் ராஜ் (12) அங்குள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று இவருக்கும் அவரது அண்ணனுக்கும் ஏற்பட்ட தகராறு வாழ்க்கையில் வெறுப்படைந்து வீட்டில் கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) சண்முகம் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.