தூத்துக்குடியில் பரபரப்பு... "எடப்பாடி ஒரு துரோகி" என போஸ்டர்‍ உருவபொம்மை எரிப்பு!

தூத்துக்குடி, கோவில்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமி உருவப் படத்தை எரித்து பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடியில் பரபரப்பு... "எடப்பாடி ஒரு துரோகி" என போஸ்டர்‍  உருவபொம்மை எரிப்பு!

தூத்துக்குடி, கோவில்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமி உருவப் படத்தை எரித்து பாஜகவினர் போராட்டம் நடத்தினர். 

கூட்டணி தர்மத்தினை மீறி பாஜக நிர்வாகிகளை அதிமுகவில் இணைப்பதை கண்டித்து, முன்னாள் முதல்வர் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி  இனாம்மணியாச்சி பஸ் நிறுத்தம் அருகே பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி  சார்பில்  அதன் மாவட்ட தலைவர் தினேஷ்ரோடி தலைமையில் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதுபோல் தூத்துக்குடியிலும் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.  மேலும், எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து பாஜக இளைஞர் அணி என்ற பெயரில் தூத்துக்குடியில் பல பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.