மணல் மாஃபியா கொலை மிரட்டல்- விவசாயிக்கு 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

மணல் மாஃபியா கொலை மிரட்டல்கள் எதிரொலியாக முறப்பநாடு அருகே விவசாயி ஒருவர் கடந்த 2 வருடங்களாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாழ்ந்து வருகிறார்.

மணல் மாஃபியா கொலை மிரட்டல்- விவசாயிக்கு 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

மணல் மாஃபியா கொலை மிரட்டல்கள் எதிரொலியாக முறப்பநாடு அருகே விவசாயி ஒருவர் கடந்த 2 வருடங்களாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாழ்ந்து வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அகரம் என்ற சிறு கிராமம்.இங்கு வசிக்கும் விவசாயி பாலகிருஷ்ணன், விவசாயத்துடன் ஆடு மாடுகள் வளர்ப்பு பணிகளையும் செய்து வந்திருக்கிறார். மேலும் கடந்த 2019 ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 1வது வார்டு பஞ்சாயத்து உறுப்பினராகவும் உள்ளார். அதே ஆண்டு இறுதியில் அகரம் ஊரின் தாமிரபரணி ஆற்றின் கரை பகுதியில் மணல் கொள்ளை நடக்கிறது.  என தனது வார்டு மக்கள் புகாரை பெற்று முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.இந்நிலையில் மதுரை கிளை நீதிமன்றத்தில் கடந்த 14.10.2020 ல் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து நடந்த அடுத்த கட்ட விசாரணைகளில் மனுதாரர் பாலகிருஷ்ணனுக்கு மணல் கொள்ளையர்களால் கொலை மிரட்டல் இருப்பதை உறுதி செய்த நீதிபதிகள் புகழேந்தி மற்றும் கிருபாகரன் இருவரும், 19.11.2020 அன்று முதல் மனுதாரர் பாலகிருஷ்ணனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க வேண்டுமென காவல்துறைக்கு பரிந்துரை செய்தனர். அதனடிப்படையில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக ஆடு மேய்க்கும் விவசாயி பாலகிருஷ்ணனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் ஒருவர் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கி வருகிறார். விவசாயி பாலகிருஷ்ணன் எங்கு சென்றாலும் பாேலீஸ் பாதுகாப்புடனே சென்று வருகிறார்.