தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 1 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 1 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அடுத்தடுத்து வலுவடைந்து நேற்று காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாக மாறியது. இது மேலும் வலுவடைந்து, இன்று புயலாக மாறவுள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மாலை 5.30 மணிக்கு புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த புயலுக்கு தற்போது மோச்சா என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் தங்கள் படகுகளை கரைகளில் பத்திரமாக நிறுத்தி வைக்கும்படி மீன்வளத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.