நாடார் சமுதாயத்தை விமர்சித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது எஸ்பி அலுவலகத்தில் புகார்!
நாடார் சமுதாயத்தை வினர்சித்த இருந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பி அலுவலகத்தில் நாடார் சமுதாய சங்கத்தினர் மனு அளித்தனர்.
நாடார் சமுதாயத்தை வினர்சித்த இருந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பி அலுவலகத்தில் நாடார் சமுதாய சங்கத்தினர் மனு அளித்தனர்.
இது தொடர்பாக அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
இந்து மக்கள் கட்சி சார்பில் தூத்துக்குடியில் 02.04.2023 அன்று இந்து சனாதன எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கிறிஸ்தவர்களாக மத மாறிய நாடார்கள் நாடார்கள் இல்லை என பேசியுள்ளார். தமிழ்நாட்டில் பல்வேறு சமுதாயங்கள் வாழ்ந்து வருகின்றனர். அதேபோல் நாடார்களில் ஒரு தரப்பினர் கிறிஸ்தவ மதத்தையும் பின்பற்றி வருகின்றனர். ஆனால் எந்த சமுதாயத்தை பற்றியும் விமர்சிக்காத அர்ஜுன் சம்பத் நாடார்களை மட்டும் விமர்சித்துள்ளார். இது அவர் நாடார்கள் மீது கொண்டுள்ள வண்மத்தை காட்டுகிறது. மேலும் இது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் எங்கள் நாடார் சமுதாயத்தை சார்ந்த அரசியல் கட்சி தலைவர்களை மிகவும் கீழ் தரமாகவும் மோசமாகவும் பேசியுள்ளார். குறிப்பாக தென் மாவட்டம் நாடார் சமுதாயம் பெரும்பான்மையாக வாழும் சமுதாயம் ஆகும். தென் மாவட்டங்களில் ஜாதி, மத மோதல்களை உருவாக்கும் விதமாக வேறு சமுதாயத்தவர்களை மேடையில் வைத்துக் கொண்டு நாடார் சமுதாயத்தை விமர்சித்து அவதூறு பரப்பி வரும் நாடார் சமுதாயம் அல்லாத அர்ஜுன் சம்பத்தின் இச்செயல் மிகவும் கண்டிக்க தக்கது,
மேலும் கிறிஸ்தவத்தை பின்பற்றும் நாடார்களை நாடார்களே இல்லை என இரண்டு வருடம் முன்பு News 18 தொலைக்காட்சியில் பேசியுள்ளார். இதனால் நாடார்கள் மிகவும் கொந்தளிப்பில் உள்ளனர். எனவே இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.