தூத்துக்குடியில் பேச்சுவார்த்தையை மீறி செயல்பட்டு வரும் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்...

தூத்துக்குடியில் பேச்சுவார்த்தையை மீறி செயல்பட்டு வரும் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்...

தூத்துக்குடியில் பேச்சுவார்த்தையை மீறி செயல்பட்டு வரும் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்... கல்லூரி முதல்வரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் காமராஜ் கல்லூரி அரசு எடுத்து நடக்க வேண்டும் எனவும் மாணவ மாணவிகள் கோரிக்கை

தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ளது காமராஜர் கல்லூரி மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அரசு உதவி பெறும் கல்லூரி ஆகும் இந்தக் கல்லூரியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் 

இந்நிலையில் இந்த கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு அரசு மற்றும் உயர் கல்வித் துறை நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக பல மடங்கு ஆண்டுக்கு ஆண்டு உயர்த்தி வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஏழை எளிய மாணவ மாணவிகள் கல்வி கட்டணத்தை கட்ட முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

மேலும் அரசு பள்ளியில் படித்து வந்த மாணவர்களுக்கு ஒரு கட்டணமும், அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையும், மெட்ரிகுலேசனில் பயின்ற மாணவர்களுக்கு 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். மேலும் மாணவர்கள் கட்டக்கூடிய பணத்திற்கு உரிய ரசிது கூட கொடுப்பது இல்லை, வெறும் பேப்பரில் பெயரை எழுதி கையெழுத்திட்டு வழங்கி வருவதாக கூறப்படுகிறது, 

இதை தொடர்ந்து இந்த விஷயத்தில் உடனடியாக உயர்கல்வித்துறை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுத்து அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் காமராஜ் கல்லூரி முன்பு தொடர்ந்து மூன்று நாட்களாக மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோட்டாட்சியர் கல்லூரி நிர்வாகம் ஆகியோர் கிடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது இதில் கல்லூரி நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சஸ்பென்ஸ் உத்தரவை திரும்ப பெறுவது எனவும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது எனவும், பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்பட்டது. 

இந்நிலையில் தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவை மீறி கல்லூரி முதல்வர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு மாணவர்கள் போராட்டத்தின் போது கல்லூரி நுழைவு வாயிலில் உள்ள உடைமைகளை சேதப்படுத்தியதாக கூறி ரூபாய் 6,400 இறப்பீட்டுத் தொகையை ஜூலை எட்டாம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என மாணவர்களுக்கு கடிதம் மூலம் வழங்கப்பட்டுள்ளது, எனவே அரசு உத்தரவை மீறியும் செயல்படும் கல்லூரி முதல்வரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும், அரசு உத்தரவை மீறி செயல்படும் காமராஜ் கல்லூரி நிர்வாகத்தை அரசை எடுத்து நடத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத் சார்பில் மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில்

ஈடுபட்டனர்.